வல்லாரை கீரை துவையல்| Vallarai Keerai Thuvaiyal Recipe in Tamil
            வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வல்லாரை கீரை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வல்லாரை கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்துக்கள், மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடைங்கியுள்ளன.ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை சரிவிகித அளவில் கொண்டுள்ளது. வல்லாரை கீரையை கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம்.இதில் வல்லாரை கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமான சுவையில் இருக்கும்.