கன்னியாகுமரி நண்டு மசாலா | Nandu Masala Recipe In Tamil
            அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது, கோழி, மீன், இறால், நண்டு, என்று அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். இருந்தாலும் கடல் உணவுகளை சமைப்பதில் வேலைபாடுகள் அதிகம் இருப்பதால் யாரும் வீடுகளில் அதிகமாக சமைப்பது கிடையாது. அதையும் தாண்டி கடல் உணவுகள் சாப்பிட நினைப்பவர்கள் ஹோட்டல் சென்றால் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்வார்கள். ஆனால் இனி இதை செய்யாதீர்கள் கடல் உணவுகளில் சுவையான உணவு என்று எடுத்துக் கொண்டால் அதில் நண்டுவும் ஒன்று தான். அதனால் இன்று நண்டு குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு மிகவும் பிரபலமானது.