கருணைக்கிழங்கு பொரியல் | Karunai Kilangu Poriyal Recipe In Tamil
            கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் பல கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் ஒரு உணவு என்றால் அது உருளை கிழங்கு வறுவல், அல்லது கருணைக்கிழங்கு பொரியல் தான். இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியலை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே கல்யாண வீட்டில் வைக்கப்படும் அதே சுவையில் எப்படி கல்யாண வீட்டு சுவையில் கருணைக்கிழங்கு பொரியல் செய்யலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை படித்து பார்த்து நீங்களும் சமைத்து பாருங்கள்.